சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வை.தவனாதனினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (31.07.2023) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊடக சந்திப்பில் வை.தவனாதன் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 28-ம் திகதி இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைவாக சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருக்கும் மணல்களை, அவர்களிடமிருந்து மீட்டு நீதிமன்றத்தின் ஊடாக நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக நேற்று 30.07.2023 முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை போன்ற பகுதிகளில் 80 லோட் உழவு இயந்திரத்தில் மீட்கப்பட்டது .இந்த நடவடிக்கையில் பொலிஸாரும் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்