தமது அமைப்பிலிருந்து பதவியை இழந்த ஒரு குழுவினர் அமைப்பை இழிவு படுத்தும் செயலில் ஈடுபடுவதாக தெரிவித்த இலங்கை செஞ்சிலுவை சங்கம், குறித்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான அறிக்கைகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் குறித்த குழுவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இத் தீர்மானமானது கடந்த திங்கட்கிழமை (07) நடைபெற்ற பணிப்பாளர்கள் குழு சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.