சந்நிதியான் ஆச்சிரமத்தால் இரு மாணவர்களுக்குப் புதிய துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (04.07.2025) முற்பகல்-10.45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் ஆசிரியர் திருமதி. சுதர்சன் அமுதகலா கலந்து கொண்டு “ஆயத்தமில்லை” எனும் தலைப்பில் ஆன்மீக உரை ஆற்றினார். நிகழ்வில் பொருளாதார நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த கரவெட்டி காட்டுப்புலம், அச்சுவேலி பத்தமேனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு பாடசாலை மாணவர்களுக்கு மொத்தமாக 97 ஆயிரம் ரூபா பெறுமதியான இரு புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.