சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீகச் சொற்பொழிவு

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ் வெள்ளிக்கிழமை (06.02.2026) முற்பகல்-10.30 மணியளவில் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் ஓய்வுநிலை ஆசிரியர் இரா.செல்வவடிவேல் கலந்து கொண்டு ‘ கம்பராமாயணம் வாழ்வியல் கருத்துக்கள் ‘ எனும் தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றினார்.