கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, சிகிச்சை முடிவடைந்த பின்னர் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர், வைத்தியசாலை அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, மேலதிக விசாரணைகளுக்காக அவர் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சுரேஷ் சலே தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட விசாரணை ஒன்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

