சிறிலங்கா காவல் துறை பரிசோதகரின் சைக்கிள் தீக்கிரை

தியத்தலாவ காவல் துறை  நிலையத்தின் கடமையாற்றும்   உப காவல் துறை பரிசோதகர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் புதன்கிழமை (19)   அதிகாலை திருடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தியத்தலாவை நகரில் செவ்வாய்க்கிழமை (18) இரவு மேற்கொண்ட   சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கைது செய்த உப  காவல் துறை  பரிசோதகர்   தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கைது செய்யப்பட்ட நபரின் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றுள்ளார்.

பின்னர்  மோட்டார் சைக்கிளை எடுக்க  சென்ற போது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்ட இடத்தில் காணவில்லை என அவர்  தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து  விசாரணைகளை மேற்கொண்ட காவல் துறையினர்  ​​தியத்தலாவ கல்கந்த பிரதேசத்தில் உள்ள பைனஸ் காட்டு பகுதியில் எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் தியத்தலாவ காவல் துறையினர்  விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.