வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியின் பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, சிரேஷ்ட அரச உத்தியோகத்தரும் ஜனாதிபதி அலுவலகத்தில் மேலதிக செயலாளராக கடமையாற்றுபவருமான சாந்தனி விஜேவர்தன இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.