மூத்த தமிழ் அரசியல்வாதியும், வல்வெட்டித்துறை நகர பிதாவுமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்காக அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத்தின் தலைவர் பாலச்சந்திரமூர்த்தி வீரசுரேந்திரன், வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத்தின் உப தலைவர் சிவகுருநாதன் குருநீலன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (24.05.2026) வல்வெட்டித்துறை நெடியகாட்டிலுள்ள சிவாஜிலிங்கத்தின் இல்லத்தில் நேரடியாகச் சந்தித்து ஒரு தொகுதி நிதியை வழங்கி வைத்துள்ளனர்.



