உள்ளூராட்சி, மாகாண மற்றும் பாராளுமன்ற மட்டத்திலான தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் 15 உலக ஜனநாயக தினமாகும். உள்ளுராட்சி மற்றும் மாகாண மட்டத் தேர்தல்கள் தொடர்ந்து பிற்போடப்பட்டு வருவது ஜனநாயகத்துடன் தொடர்புடைய ஒரு விடயமாகும்.
“பிற்போடப்பட்டுள்ள மாகாண அல்லது உள்ளுராட்சித் தேர்தல்களை விரைவில் நடாத்த உரிய அதிகாரிகள் ஒழுங்குகளை செய்ய வேண்டும்” என தேசப்பிரிய தெரிவித்தார்.
மேலும், மாகாண சபைகளை ஆளுநர்களின் கீழ் நிர்வகிப்பதும், உள்ளூராட்சி சபைகளை ஆணையாளர்களின் கீழ் நிர்வகிப்பதும் சட்டவிரோதமானது என்றும் அவர் கூறினார்.