ஜகத் பிரியங்கர நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் !

விபத்தில் உயிரிழந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமடைந்த பாராளுமன்ற ஆசனத்திற்கு ஜகத் பிரியங்கர சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்றையதினம் பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகியது.

பாராளுமன்ற நடவடிக்கை ஆரம்பிக்கும் போது ஜகத் பிரியங்கர பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

விபத்தில் உயிரிழந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால் வெற்றிடமடைந்த ஆசனத்திற்கு ஜகத் பிரியங்கர சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று வியாழக்கிழமை (08) இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.