ஜே.ஆர் நிறைவேற்றிய ’13’ ஐ அவ்வாறே நடைமுறைப்படுத்துங்கள் ; ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜே.ஆர் ஜயவர்த்தனவால் ஆறிலைந்து பெரும்பான்மையுடன் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தினை அவ்வாறு நடைமுறைப்படுத்துமாறு தமது முன்மொழிவில்  கோருவதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைமைத்துவ சபையினுடைய கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (06) மெய்நிகர் வழியில் இடம் பெற்றது. இதன் போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டம் சம்பந்தமாக அக்கூட்டணியின்  ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்ததாவது,

1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டதன் பின்னர் அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜயவர்த்தனவினால் ஆறிலைந்து பெரும்பான்மையுடன்  13 வது திருத்த சட்டம் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்டது.

அதற்கு அமைவாக காணி, பொலிஸ், நிதி மற்றும் நிர்வாகம்  உள்ளிட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்களை  அவ்வாறே முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவினை கூட்டணியின் பங்காளி கட்சித் தலைவர்கள் அடுத்த வாரம் அளவில் இறுதி செய்து ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளனர் என்றார்.

சமீபத்திய செய்திகள்