டில்மா தேயிலையின் ஸ்தாபகர் மெரில் ஜே. பெர்னாண்டோ காலமானார்

டில்மா தேயிலையின் ஸ்தாபகர் மெரில் ஜே. பெர்னாண்டோ தனது 93 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

1974ஆம் ஆண்டு மெரில் ஜே.பெர்னாண்டோ­வினால் டில்மா (சிலோன் டி சர்விஸ் பி.எல்.சி) ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஐக்­கி­ய ­இ­ராச்­சியம், துருக்கி, தென்­னாபி­ரிக்கா, பாகிஸ்தான், லித்­து­வே­னியா, போலந்து ஹங்­கேரி, கனடா உட்­பட உலகில் பெரும்­பான நாடு­களில் டில்மா தடம் பதித்­துள்­ளது.

தூய்­மை­யான முறையில் உயர் தரத்­துடன் ஏற்­று­மதி செய்­ய­ப­டு­வதால் அவுஸ்தி­ரே­லியா, நியூ­சி­லாந்து உட்­பட்ட 100க்கும் அதி­க­மான நாடு­களில் டில்மா வர்த்தக நாமம் பொறிக்­கப்­பட்ட தேயி­லைக்கு அதிக கேள்வி காணப்­ப­டு­கி­றது.