சகாயபுரம் மாதகல் பகுதியில் வசிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணிச் செயற்பாட்டாளர் ராஜினி அவர்களது வீட்டினுள் 27-07-2023 நள்ளிரவு வேளையில் பி.ப 10.45 மணியளவில் இளவாலை காவல் துறைஅத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் இடம்பெறவுள்ள மனிதப் புதைகுழிககு சர்வதேச நீதிகோரும் போராட்டத்திற்கு பொது மக்களைத் தயார்ப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த கட்சியின் மிக முக்கிய செயற்பாட்டாளர் ராஜினியை அச்சுறுத்தி அடிபணியச் செய்யும் நோக்கிலேயே சிறிலங்கா காவல் துறை அத்துமீறல் இடம்பெற்றுள்ளது. இளவாலை காவல் துறை இச் செயற்பாட்டினை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.