நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையுடன் தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டிணைந்து, ஒரு தீர்வு திட்ட வரைபு முயற்சியை முன்னெடுக்கின்றது. இதற்கு முயற்சிக்கு பின்னால் சுவிஸ் தூதரகம் உள்ளதா என தமிழ் தேசிய பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயகத்தை விரும்பும் நாடாக மாறிக் கொண்டிருக்கும் இலங்கை, ஏன் தமிழ் கட்சிகளின் பிரகடனங்களில் வரும் மாற்றங்களை ஏற்கொள்ளாது. தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து, திட்ட வரைபு முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே நோக்கமாகும்.
தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் தமிழ் தேசிய கட்சிகள் கூட்டிணைந்து தீர்வு திட்ட வரைபு முயற்சியை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிவில் தரப்புக்கள் மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், தமிழ் சட்டத்தரணி பேரவைகளுடன் மற்றைய தமிழ் கட்சிகள் இணைந்து பயணிக்குமா? என்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.





