சந்தேக நபரால் திருடப்பட்ட நகையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் பம்பலப்பிட்டி பிரதேசத்தில் பெண் தோழியுடன் காரில் இருந்த தயாசிறி ஜயசேகரவின் மகனை, சந்தேகநபர் அச்சுறுத்தியுள்ளார்.
அத்துடன், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த சுமார் 160,000 ரூபாய் பெறுமதியான வெள்ளை தங்க நகையை சந்தேக நபர் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.