தரம் குறைந்த நிலக்கரியை கொண்டுவந்த நிறுவனத்தை பாதுகாப்பதற்காக அரசாங்கம் இராசாயன அறிக்கையை மறைத்துள்ளது. அதேநேரம் நிலக்கரி சம்பவம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னிணின் செயலாளர் மற்றும் வலுசக்தி அமைச்சர் ஆகியோரின் கருத்துக்கள் முரண்பட்டதாகும் என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் தரம் குறைந்த நிலக்கரி தொடர்பிரல் ஞாயிற்றுக்கிழமை (08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போது, நிலக்கரி தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்களில் பாரிய தவறுகள் காணப்படுகின்றன.
இவர் தெரிவித்த சில கருத்துக்கள், இதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் மின்சக்தி மற்றும் மின்சக்தி அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அது பொய் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் கைவிடப்பட்ட தகவல்களாகும்.
மின்சக்தி அமைச்சர் இதுதொடர்பிலான புதிய தகவல்களை மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளருக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என்தால், பொதுச் செயலாளர் எந்த புதுப்பிப்பும் இல்லை என்பது தெளிவாகிறது.
இதற்கு முன்னர் கேள்விக்கோரல் இல்லாமல் அரசியல்வாதிகள் நிறுவனத்தினால் அதிக விலைக்கு நிலக்கரி விலைக்கு பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார். அது பிழையாகும்.
2008ல் லக்விஜய மின்உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட பினனர் இன்றுவரை ஒவ்வோரு வருடமும் கேள்விக்கோரல் விடுக்கப்பட்டு, குறைந்த விலை சமர்ப்பிக்கும் விநியோகஸ்தருக்கு கேள்வித்திரத்தை வழங்கி இருக்கிறது.
2023ஆம் ஆண்டு கேள்விக்கோரப்பட்வில்லை என பொதுச் செயலாளர் இந்த நேர்காணலின்போது தெரிவித்திருந்தார். மின்சக்தி அமைச்சரும் முன்னதாக இவ்வாறு தெரிவித்திருந்தார்.
ஆனால் நாங்கள் கேள்விப்பத்திரம் கோரியதை காட்டிய பின்னர், அவ்வாறு தெரிவிப்பதை நிறுத்திக்கொண்டார். தற்போது அவர், 2023 கேள்விக்கோரலின் குறிப்புகள் எதனையும் மாற்றாமல் அவ்வாறே முன்னெடுத்துச்செல்வதாக குறிப்பிடுகிறார். அந்த தகவலும் பிழையாகும்.
2023ல் அவ்வாறான தகவல்கள் மாற்றியமை காண்பதற்கில்லை. என்றாலும் பொது செயலாளர் சில்வா சில்வா தெரிவிக்கும் வகையில், 2023 கேள்விக்கோரல் ஒன்று மேற்கொள்ளப்படவில்லை என்றால், அமைச்சர் குமார ஜயகொடி தெரிவிக்கும் வகையில் கேள்விக்கோரல் குறிப்பு 2023ல் எவ்வாறு அறிவிக்கப்பட்டது? அதனால் இவர்கள் இரண்டு பேரும் தெரிவிக்கும் கருத்து ஒருத்தருக்கொருத்தர் முரண்பட்டதாகும். 2024இல் கேள்விக்கோரல் விடுக்கப்படவில்லை என தெரிவித்த கருத்தும் பிழையாகும்.
அத்துடன் அமைச்சர் முறையான சட்டத்தின் பிரகாரம் கேள்விக்கோரல் விடுத்துள்ளதால், அவர் பதவி விலக தேவையில்லை எனவும் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பில் பல பிரச்சினைகளை நாங்கள் ஆரம்பத்தில் தெரிவித்தோம்.
மேலும் தரம் குறைந்த நிலக்கரி கொண்டுவரப்பட்டபோது, நிறுவனத்தை பாதுகாப்பதற்கு இரசாயன அறிக்கையை மறைத்தார்கள். இரண்டு கப்பல்கள் உரிய தரத்தில் இல்லாமல் ஆகும்போது, கேள்விக்கோரல் நிராகரிக்கப்படுவதாக கேள்விக்கோரலின் ஒப்பந்தத்தில் இருக்கும்போது, அந்த கட்டளை கோரலை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்கிறார்கள்.
அத்துடன் நிறுவனத்துக்கு நன்மை பயக்கும் வகையில், அரசாங்கம் ஒப்பந்தத்தை மீறி அவசர கொள்வனவுகளுக்கு அனுமதி வழங்கி இருக்கிறது.
அதனால் நிலக்கரி கேள்விக்கோரலின் முழு நடவடிக்கையும் சந்தேகத்திற்குரியதாகும். தான் மோசடி செய்யவில்லை என்றால், அமைச்சர் பதவி விலக தேவையில்லை. ஆனால் சுயாதீன விசாரணை ஒன்றில் அவ்வாறான மோசடி இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டால், அமைச்சரை அந்த பதவியில் இருந்து நீக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இருக்கிறது. அதனால் இது அரசாங்கத்தின் தூய்மை தொடர்பான விசாரணையாகும் என்றார்.





