திருவிழா மத்தியில் திருட்டு ; 4 பெண்கள் கைது

யாழ்ப்பாணம் – நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் திங்கட்கிழமை (31) இடம்பெற்ற தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியைகே களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 4 பெண்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தேர்த்திருவிழாவில் தண்ணீர் பந்தலில் பானங்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது பெண் ஒருவரின் தாலிக்கொடி களவாடப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய சிலாபத்தைச் சேர்ந்த 26 வயது பெண், வவுனியாவைச் சேர்ந்த 37 வயதான பெண், மாத்தறையைச் சேர்ந்த 28 வயதுப் பெண் மற்றும் 49 வயதான இந்தியப் பிரஜை ஆகியோர் மக்களால் பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.