தெல்லிப்பழையில் பொருளாதார நலிவுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்

தெல்லிப்பழை மகாதனை அண்ணா சனசமூக நிலைய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஜே-229 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை மகாதனைப் பகுதியைச் சேர்ந்த 25 பொருளாதார நலிவுற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கி ஞாயிற்றுக்கிழமை(29.10.2023) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தெல்லிப்பழை மகாதனை அண்ணா சனசமூக நிலைய மண்டபத்தில் சனசமூக நிலையத் தலைவர் ந.உமாகரன் தலைமையில் உலர் உணவுப் பொதிகளைக் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.