தேயிலை செடிகளுக்குள் புகுந்தோடிய கார்

அதிவேகமாக வந்த காரொன்று வீதியை விட்டு விலகி தேயிலை செடிகளுக்குள் புகுந்தோடி து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், திங்கட்கிழமை (25) காலை 08 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி கார் அதிவேகமாக செலுத்தப்பட்டுள்ளது. அப்போது நாயொன்று  வீதியை கடக்க முட்பட்டுள்ளத, நாயை காப்பாற்றும் முயற்சியால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார்  தேயிலை செடிகளுக்குள் சென்றுவிட்டது.

விபத்தின் போது, ​​காரில் நான்கு பேர் இருந்தனர், அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவித் பொலிஸார் கார் பலத்த சேதமடைந்ததுள்ளது என்றனர்.