தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொது மக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் இன்று சனிக்கிழமையும் (31.01.2026), நாளை ஞாயிற்றுக்கிழமையும் (01.02.2026) தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று மாலை-04 மணி முதல் மாலை-06 மணி வரையும், பெளர்ணமி நாளான நாளை காலை-07 மணி முதல் மாலை-06 மணி வரையும் போராட்டம் இடம்பெறும்.