தொடருந்து சேவைகள் சில இன்று இரத்து

இன்று சில அலுவலகதொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

விசேட நேர அட்டவணையின் கீழ் 6 தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.