தொடர்ந்தும் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது!

அஸ்வெசும சமூக நலன்புரி நன்மைகள் திட்டத்துக்கு தெரிவு செய்யப்படாதவர்களுக்கு  தொடர்ந்தும் சமுர்த்தி கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சமுர்த்தி கொடுப்பனவை பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவாகாத குடும்பங்களுக்கே தொடர்ந்தும் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

தற்போது சமுர்த்தி கொடுப்பனவு கிடைக்கும் குடும்பங்களில் அஸ்வெசும திட்டத்துக்கு தகுதி பெறாத 3,93,097 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவை தொடர்ந்து வழங்க  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.