தொல்பொருட்களுடன் பெண் உட்பட 8 பேர் கைது

கடவத்தை பிரதேசத்தில் தொல்பொருட்களுடன் பெண் உட்பட 8 பேர் சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பசுவத்த , கடவத்தை, ராகமை, இமதுவ , ரதகஹமுனை பிரதேசங்களில் வசிக்கும் 20 மற்றும் 54 வயதுக்குட்பட்டவர்களாவர்.

கடவத்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் விலையுயர்ந்த ஒரு வகை கற்சிலையின் பாகங்கள் மற்றும் பித்தளை பொருட்கள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.