ரம்புக்கனைக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெயங்கொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பிரதான ரயில் சேவைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, புகையிரத சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று (24) காலை சேவையில் ஈடுபடவிருந்த 11 ரயில் சேவைகள் இரத்தாகியுள்ளன.
இதனால் ஏனைய ரயில் சேவைகள் தாமதமாகும் சாத்தியம் உள்ளதாக ரயில்வே திணைக்களம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.