நடுவில் கொஞசம் பக்கங்களை காணோம்” என்ற படத்தை பலரும் பார்த்திருப்பார்கள் எனினும், போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிளின் பொறுப்பில் கீழிலிருந்த தண்டப் புத்தகத்தில் நடுவில் சில பக்கங்கள் காணாமல் போயுள்ள சம்பவம் ஊர்பொக்க பொலிஸில் இடம்பெற்றுள்ளது.
ஊருபொக்க பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பொறுப்பிலிருந்த போக்குவரத்து குற்றம் தொடர்பான அபராத விதிப்பு புத்தகத்தின் 50 பக்கங்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1 முதல் 50 வரையான பக்கங்களை காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து போக்குவரத்து பிரிவு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.