யாழ் மாவட்ட அழகக கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நத்தார் பண்டிகை நாளான எதிர்வரும்-25 ஆம் திகதி வியாழக்கிழமை அழ கு நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அழகக கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் செயலாளர் ஆ.உதயசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்புப் பண்டிகைக்கு முன்னர் வருகின்ற எதிர்வரும்- 21 ஆம் திகதி மற்றும் 28 ஆம் திகதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் அழகு நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை.
அத்துடன் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு எதிர்வரும்- 29,30,31 ஆம் திகதிகளில் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது என்பதனையும் எமது அங்கத்தவர்கள் அனைவருக்கும் அறிய தருகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.




