நபரொருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி நாவலடியில் நபரொருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிண்ணியாவைப் பிறப்பிடமாகவும் நாவலடியில் திருமணம் செய்து வசிப்பிடமாகவும் கொண்ட 30  வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான அலாப்தீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், இரு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணவன் – மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது கொலையாக இருக்கலாமா என்ற  சந்தேகத்தில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.