நயினாதீவில் பொதுமக்களுக்கான நடமாடும் சேவை

ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையுடன் யாழ்.மாவட்டச் செயலகமும், வேலணைப் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பொதுமக்களுக்கான நடமாடும் சேவை  செவ்வாய்க்கிழமை(18.11.2025) காலை-08.30  மணி முதல் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் வேலணைப் பிரதேச செயலாளர் தனபாலசிங்கம் அகிலன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நடமாடும் சேவையில் யாழ்.மாவட்ட மேலதிக செயலர் கை.சிவகரன், மாவட்ட மேலதிக செயலர் (காணி) பா.ஜெயகரன், உதவி மாவட்டச் செயலர் செல்வி உ.தர்சினி, வேலணை உதவிப் பிரதேச செயலாளர் க.பாா்த்தீபன், மாவட்டச் செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபத்திய செய்திகள்