நயினாதீவில் ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகளின் 75 ஆவது ஆண்டு குருபூசை

நயினைச் சித்தர் தவத்திரு ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகளின் 75 ஆவது ஆண்டு சமாதி நிறைவுதின குருபூசை நிகழ்வு இன்று புதன்கிழமை(07.02.2024) காலை நயினாதீவிலுள்ள  சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் நடைபெற்றது.

108 சங்காபிஷேகம், குருபூசையைத் தொடர்ந்து நயினை ஞான முத்து நூல் சிறப்பு மலர்  வெளியீடும், முத்துக்குமார நாதம் இசை இறுவெட்டு வெளியீடும் இடம்பெற்றது.