நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகந்தவெவ பகுதியில் வயல் நிலமொன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பலுகந்தவெவ, நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
திங்கட்கிழமை (23) மாலை வீட்டிலிருந்து வெளியேறிய இவர், பலுகந்தவெவ வயல்வெளியில் பொருத்தப்பட்டிருந்த வேட்டைத் துப்பாக்கியில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் நவகத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக ஆனமடுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று செவவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், பலுகந்தவெவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நவகத்தேகம பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் நவகத்தேகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.




