நவகமுவ, பொமிரிய பிரதேசத்தில் வீடு ஒன்றில் விகாரையை நடத்தி வந்த பல்லேகம சுமன என்ற தேரர் இன்று செவ்வாய்க்கிழமை (08) கைது செய்யப்பட்டதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பிரதேச மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேரர் பொலிஸுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 6 ஆம் திகதி, விஹாரை ஒன்றின் பெயரில் இயங்கும் வீட்டின் அறையில் ஒரு பெண்ணையும் யுவதியையும் மிகவும் நெருக்கமாக வைத்திருந்தபோது, பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.