யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்திதிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று(27.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவம் வெளியேறியதை உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், 25 வருடங்களுக்கு மேலாக கைப்பரியிருந்த குறித்த ஆலயப்பகுதியிலிருந்து நேற்று(27) இராணுவம் வெளியேறியதை தொடர்ந்து, அங்கு பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவம் அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் இடித்து அழித்துவிட்டு சென்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.





