நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்த பின்னரே இந்தியாவுடனான தீர்மானங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்படும்

இந்தியாவுடன் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளை அபிவிருத்தி செய்துகொள்வது தொடர்பில் எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பாராளுடன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.

நினைத்த பிரகாரம் செயற்படப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின்போது இரண்டு நாடுகளுக்கிடையில் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளை அபிவிருத்தி செய்துகொளவதற்கான கலந்துரையாடலகளில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதிக்கு முடியுமாகி இருந்தது.

அதேபோன்று எதிர்வரும் 29ஆம் திகதி ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூக்குழுவொன்று இலங்கைக்கு வர இருக்கிறது. ஜனாதிபதி ஜப்பானுக்கு சென்று ஏற்படுத்திக்கொண்ட நம்பகத்தன்மையின் பிரகாரமே ஜப்பான் தூதுக்குழு நாட்டுக்கு வந்து நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாட இருக்கிறது.

குறிப்பாக ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது இலங்கை, இலங்கைக்கு ஏற்புடையதான திட்டங்களை தயாரித்துக்காெள்ளல், இந்தியா இந்தியாவுக்கு ஏற்புடையதான திட்டங்களை தயாரித்தல் இடம்பெற்றாலும் இந்திய விஜயத்துடன்  இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அரசாங்கங்களும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புகளை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் திட்டங்களை அமைத்துக்கொள்வது தொடர்பாக கலந்துரையாடி இருந்தமை விசேட அம்சமாகும்.

குறிப்பாக தரைமாக்கமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பொருட்களை ஏற்றிச்செல்லல் மற்றும் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதை மிகவும் இலகுபடுத்திக்கொண்டு இரண்டு நாடுகளுக்கிடையில் அது தொடர்பில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியுமாகியது, எமது நாட்டு மக்களுக்கு  மிகவும் நிவாரண முறையில்  பண்டப் பொருளாதாரத்துக்குள் செயற்பட முடியுமான வாய்ப்பு கிடைக்கிறது.

அதேபோன்று சமுத்திர வலயங்கள் மற்றும் அதன் இணக்கப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடும்போது ஐராேப்பிய நாடுகள் ஐராேப்பிய நாடுகளுடன் அபிவிருத்தியடைந்திருக்கின்றன. அதேபோன்று மத்திய கிழக்கு நாடுகள் சீனா மற்றும் ஐக்கிய அமெரிக்காவும் இந்த கூட்டு இணக்கப்பாடுகளின் அடிப்படையில் வளர்ச்சியடைந்திருப்பதை நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது. அதனால் ஆசிய வலயமும் வயமாக ஒன்றிணைந்து பணியாற்றுவதன் தேவைப்பாடு இந்த சந்திப்பின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.

அத்துடன் ஆந்திரா, தெலுங்கான போன்ற பிரதேசங்கள் மிகவும் விரைவாக முன்னேற்றமடைந்த பிரதேசங்களாக மாறி இருக்கின்றன.

இந்த பிரதேசங்களுடன் இலங்கைக்கு சந்தை கொடுக்கல் வாங்கல்களுக்காக இடமளிப்பது தொடர்பில் கலந்துரையாடடி இருப்பது முக்கிய விடயமாகும். அதேபோன்று திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகமும் தனிமைப்படுத்தப்பட்ட துறைமுகங்களாக ஏற்படுவதை தடுத்துக்கொள்வதற்கு இந்த தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

மினவ சமூகத்துக்கு மிகவும் அத்தியாவசியமான வடக்கு கடலில் கீழால் இழுத்தல் முறை ஊடாக  மீன் பிடிப்பதை தடைசெய்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்கு அப்பால்  மீன்பிடி தொழிலை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடி இருக்கிறது.

மேலும் தற்போது பலாலியில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு படகு போக்குவரத்தை ஸ்தாபிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று 2030ஆகும் போது வலுசக்தி பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க முடியுமான நிலைமையை ஏற்பாடு செய்துகொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருக்கிறது.

எனவே இந்தியாவுடன் கலந்துரையாடப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் எதுவும் நினைத்த பிரகாரம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்போவதில்லை.

பாராளுமன்றத்தினல் அனுமதிக்கப்பட்ட பின்னரே இவற்றை மேற்கொள்ள இருக்கிறோம். விரைவாக முன்னேற்றமடைந்துவரும் நாடுகளை புறந்தள்ளிவிட்டு எமக்கு முன்னேற முடியாது. அனைவரதும் ஒத்துழைப்புடன் முன்னுக்கு சென்று நாட்டை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் கொள்கையாகும் என்றார்.

சமீபத்திய செய்திகள்