பாராளுமன்றத்தின் அனுமதியின்றி விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட சட்டமூலமாக பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்னால் இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது வர்த்தமானி மூலமும் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய சட்டமூலத்தின் ஊடாக விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.