நானுஓயாவில் விபத்து – ஒருவர் படுகாயம்!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பங்கலாவத்த பகுதியில் வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளாகியது.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை  பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நுவரெலியாவிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த வேனும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டியில் ஆரம்ப சிகிச்சை வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,

இதனையடுத்து வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.