நிலக்கரி விவகாரத்திற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைப்பு

நிலக்கரி தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) உரையாற்றிய அவர், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பின்னர் இந்த விசாரணை முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

மேலும், இந்த ஆணைக்குழுவில் பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.