நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக யாழில் 3 குடும்பகள் பாதிப்பு!

நாடு முழுவதும் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 10பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/28 கிராம சேவகர் பிரிவில் உள்ள புங்குடுதீவில் இந்த பாதிப்பு இடம்பெற்றுள்ளது.

கடுமையான காற்றுடன் கூடிய கனமழை காரணமாக அங்கு மூன்று வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.