நீர்கொழும்பு நீதிமன்றம் அருகே அமைந்துள்ள மீனவ துறைமுகம் அருகில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளது.
இறந்த நிலையில் காணப்படும் பெண்ணின் உயரம் ஐந்து அடி எனவும் மூக்கின் வழியாக இரத்தம் கசிவதை காண முடிகிறது எனவும் காவல் துறையினர் தெரிவித்ததுடன் குறித்த பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்
இச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.