மல்சிரிபுர பொலிஸாரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி ஒருவர் இன்று காலை குருநாகல் நீதிமன்றத்தின் கூரையில் ஏறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கூறி மல்சிரிபுர பொலிஸார் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி 55 வயதுடைய நபர் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் குறித்த நபரை கூரையிலிருந்து கீழே இறக்க முயன்றனர்.
சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியமை குறிப்பிடத்தக்கது.