நுவரெலியா தபால் நிலையக் கட்டடத்தை முதலீட்டு திட்டத்துக்குப் பயன்படுத்த அனுமதி

நுவரெலியா தபால் நிலைய கட்டடத்தை முதலீட்டு திட்டத்துக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம்  பிரசாத் ரணவீர தெரிவிக்கையில், தபால் நிலையத்துக்கு  மாற்று இடம் வழங்கிய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.