வீட்டின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற தண்ணீர் நிறைந்த கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்தான்.
வாரியபொல காவல் துறை பிரிவிற்குட்பட்ட மிடியால பண்டாரகொஸ்வத்தை, பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் நேற்று (26) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீட்டின் பின்புறம் சுமார் 2 அடி உயரத்தில் இருந்த பாதுகாப்பற்ற தண்ணீர் நிரம்பிய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.