யாழ் வடமராட்சி வடக்குப் பருத்தித்துறைக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இளம் மீனவரொருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படகிலிருந்து தவறி விழுந்து காணாமல் போன நிலையில் ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்த விஜயகுமார் நிக்சன் (வயது- 23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீனவர்களி ன் தொடர்ச்சியான தேடுதலின் பின்னரே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.





