பல் பொருள் விற்பனை நிலையம் திறந்து வைப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட வளாகத்தில்  பல்பொருள் விற்பனை நிலையம் திங்கட்கிழமை (10)  திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தேசகீர்த்தி நா.சசிகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான என்.சிவலிங்கம், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வீ.கனகசிங்கம், பிரதி உபவேந்தர் பேராசிரியர் கே.ஈ.கருணாகரன், ஆகியோரினால் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட வளாகத்தில் COOP Fresh பல்பொருள் விற்பனை நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.