கிளிநொச்சி – பளை காவல் துறை பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தும்பு தொழிற்சாலையொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று சனிக்கழமை (22) இரவு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பல இலட்சம் பெறுமதியான இயந்திரங்கள், தும்புகள் மற்றும் உபகரணங்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக தும்பு தொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பளை காவல் துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (21) வவுனியா – ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள தும்பு தொழிற்சாலையிலும் திடீரென தீ பரவியிருந்தது.
இத்தீ பரவல் தொடர்பில் நேற்று சனிக்கிழமை (22) வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர பொதுமக்களுக்கு அறிவித்தலொன்றை விடுத்திருந்தார்.
அதன்படி, தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பொதுமக்கள் திறந்தவெளிகளில் தீ மூட்டும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.