பாடகி உமாராவிடம் விசாரணை

தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச இன்று பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெற அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் உதவி செயலாளர் ஆகியோர் இந்த விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.