பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு மீள் சுழற்சிக்காக வலிகாமம் வடக்குப் பிரதேச சபையிடம் கையளிப்பு

பல வழிகளிலும் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள்  தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தினரால் சேகரிக்கப்பட்டு மீள் சுழற்சிக்காக    திங்கட்கிழமை(26.06.2023) வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் செயலாளர் சு.சுதர்சனிடம் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் ச.சிவசிறியால் கையளிக்கப்பட்டது.

தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியகலாநிதி.ப.நந்தகுமார், தெல்லிப்பழை உதவிப் பிரதேச செயலர் திருமதி.சங்கீதா கோகுலதர்ஷன், பிரதேச செயலக கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.