புத்தாண்டு தினத்தில் போதைப்பொருட்களுடன் காவல் துறையிடம் சிக்கிய இருவர்!

புத்தாண்டு தினமான நேற்று செவ்வாய்க்கிழமை (14) நாட்டின் இரு வேறு பகுதிகளில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிஸ்பென்சரி வீதியில் வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போது பாரியளவிலான போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 120 கிராம் 580 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 53 கிராம் 610 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் வெளிப்பன்னகஹமுல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,  எட்டம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹுலான சந்தியில், கெப்பெட்டிப்பொல பொலிஸாரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 110 கிராம் ஹெரோயின், 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கைது நடவடிக்கைகள் குறித்து  மேலதிக விசாரணைகளில்  பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்