புனர்வாழ்வு நிலைய நடத்துனர்கள் கைது

பதிவு செய்யப்படாத புனர்வாழ்வு நிலையம் ஒன்றை தெஹிவளை மல்வத்த பிரதேசத்தில் நடாத்தி வந்த இருவரை கைது செய்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையில் பதிவு செய்யப்படாமல் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நிலையம் நடத்தப்படுவதாக தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த புனர்வாழ்வு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புனர்வாழ்வு பெற்று வரும் 34 பேர் பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 50 மற்றும் 51 வயதுடைய தெஹிவளை மற்றும் பொரளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தொலிஸார் தெரிவித்தனர்.