பெரிய வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கை

சித்திரை புதுவருட காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை 375 முதல் 400 ரூபாவிற்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.