பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து: உற்சவ காலத்தை முன்னிட்டு விசேட அறிவிப்பு!

உற்சவ காலத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை  (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘கியூ.ஆர்’ முறைமை கருத்தில் கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை மற்றும் இரட்டை  முறைமை கவனத்தில் கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.